இந்தியா

நவீன கடல்சார் ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

17th Jul 2021 03:48 PM

ADVERTISEMENT

நாட்டின் போர்திறனை வலுப்படுத்தும் விதமாக 2 நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து இந்திய கடற்படை பெற்றுள்ளது.

இந்திய பாதுகாப்பு படையை வலுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் படைபலத்தை வலுப்படுத்தும் விதமாக 2 நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து இந்திய கடற்படை பெற்றுள்ளது.

அமெரிக்கா சான்டீகோவில் உள்ள கடல்படை விமான தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எச்-60-ஆர் ஹெலிகாப்டர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அனைத்து விதமான வானிலைகளையும் சமாளிக்கும் விதமான எம்எச்-60-ஆர் ஹெலிகாப்டர்களை லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. வெளிநாட்டு ராணுவ விற்பனை விதிகளின்படி 24 எம்எச்-60-ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து இந்திய கடற்படையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "ஹெலிகாப்டர்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து அதனை பெற்றுக் கொண்டார்" என்றார்.

தொடர்ந்து “இந்திய பாதுகாப்புப் படைகளின் திறனை இது மேலும் மேம்படுத்தும்” என அவர் தெரிவித்தார்.

Tags : america Indian Navy helicopter
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT