இந்தியா

ஜூலை 26-ல் பாஜக எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் கூட்டம்: எடியூரப்பா

17th Jul 2021 08:12 PM

ADVERTISEMENT


கர்நாடகத்தில் வரும் 26-ம் தேதி பாஜக எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் கூட்டத்துக்கு முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக பாஜகவில் பிளவு இருப்பதாக  நீண்ட நாள்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதல்வர் எடியூரப்பா பதவியிலிருந்து விலக வேண்டும் என கட்சியிலேயே மூத்த தலைவர்கள் சிலர் போர்க் கொடி தூக்கி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இருந்தபோதிலும் அருண் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக இதை மறுத்து வந்தனர். எடியூரப்பா ராஜிநாமா செய்யப்போவதாக அவ்வப்போது வதந்திகளும் பரவின. 

இதனிடையே கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை எடியூரப்பா சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, தான் ராஜிநாமா செய்யப்போவதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

மேலும், கட்சியை பலப்படுத்தி, மாநிலத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என சந்திப்பின்போது நட்டா அறிவுறுத்தியதாக செய்தியாளர் சந்திப்பில் எடியூரப்பா தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஜூலை 26-ல் கட்சியின் எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்துக்கு எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்த எடியூரப்பா, மேக்கேதாட்டு அணை திட்டம் உள்ளிட்ட மாநிலத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : yediyurappa
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT