இந்தியா

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் விரைவில் உருவாக்கப்படும்: அமித் ஷா உறுதி

17th Jul 2021 05:04 PM

ADVERTISEMENT

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே விரைவில் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ருஸ்தாம்ஜி நினைவு மாநாடு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீர தீர செயல்களை செய்ததற்காக எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.

பின்னர் பேசிய அவர், "ட்ரோன்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே விரைவில் உருவாக்கப்படும். டிஆர்டிஒ போன்ற நிறுவனங்கள் இம்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

வெளியுறவு கொள்கையால் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை பாதிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்த அமித் ஷா, மோடி பிரதமரான பிறகுதான் நாட்டுக்கு சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை வகுக்கப்பட்டதாகவும் கூறினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய அவர்,  “நாட்டுக்கு பாதுகாப்பு கொள்கை என்ற ஒன்று உண்டா? இல்லையா? என நான் யோசித்திருக்கிறேன். மோடி பிரதமராகும் வரை நமக்கு சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை என்ற ஒன்றே கிடையாது. வெளியுறவு கொள்கையால் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை பாதிக்கப்பட்டிருந்தது” என்றார்.

“அனைவரிடமும் அமைதியான உறவை பேணவே விரும்புகிறோம். ஆனால், நம் இறையாண்மைக்கு யாராவது சவால் விடுத்தால் தகுந்த மொழியில் பதில் அளிக்கப்படும். இதுவே நமது கொள்கை" என அமித்ஷா தெரிவித்தார்.

Tags : Amit Shah modi drone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT