இந்தியா

கர்நாடகத்தில் ஒரு கொங்கு நாடு...எழும் தனிமாநில கோரிக்கைகள்

17th Jul 2021 04:32 PM

ADVERTISEMENT

மழைக்காலக் கூட்டத்தொடரை பெல்காமில் கூட்டவில்லை எனில் வடக்கு கர்நாடகத்தை தனி மாநிலமாக்கக் கோரும் முழக்கங்கள் அதிகரிக்கும் என மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர் அசோக் பூஜாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என விவாதம் எழுந்துள்ள நிலையில் கர்நாடகத்திலும் இதேபோன்ற கோரிக்கைக்கான முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

கர்நாடகத்தின் வடக்கு பகுதி பின்தங்கியதாக இருப்பதாகவும் வளர்ச்சியை முன்னெடுக்க அதனை பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என பல காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடரை பெல்காமில் கூட்டவில்லை என்றால் வடக்கு கர்நாடகத்தை தனி மாநிலமாக கோரும் முழக்கங்கள் அதிகரிக்கும் என மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் அசோக் பூஜாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

பெல்காமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறுகையில், "காலம் காலமாக வட கர்நாடக மக்களின் விருப்பங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தகுந்த இடைவெளிகளில் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி பெல்காமை மற்றொரு அதிகார மையமாக உருவாக்க வேண்டும்.

வட கர்நாடக மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே சட்டப்பேரவையானது பெல்காமில் கட்டப்பட்டது. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக, சட்டப்பேரவை கூட்டத்தை அரசு அங்கு கூட்டவில்லை. நிர்வாகத்தை பரவலாக்க சரியான இடைவேளைகளில் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது அவசியமாகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், வட கர்நாடக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேச ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டும். பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகள் உதவி செய்யும்" என அசோக் பூஜாரி தெரிவித்தார்.

Tags : Karnataka JDS Belagavi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT