இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்து

17th Jul 2021 08:40 PM

ADVERTISEMENT

மத்தியப் பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் செஸ்னா என்கிற சிறிய ரக பயிற்சி விமானம் பயிற்சியின்போது இன்று விபத்துக்குள்ளானது. எனினும் இந்த விபத்தில் பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இத்தகவலை மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிபடுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், சாகரில் செஸ்னா பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுதொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக்குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

Tags : Jyotiraditya Scindia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT