இந்தியா

தேசத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி

15th Jul 2021 05:43 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜர் தனது வாழ்வை தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன். அவர் தனது வாழ்க்கையை தேசிய வளர்ச்சி மற்றும் சமூகத்திற்காக அர்ப்பணித்தார். கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கான அதிகாரம் ஆகியவை தொடர்பான அவரது வலியுறுத்தல்கள் தொடர்ந்து இந்திய மக்களுக்கு ஊக்கமளித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : kamaraj Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT