இந்தியா

கேரளத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி

15th Jul 2021 05:54 PM

ADVERTISEMENT


கேரள மாநிலம் கொல்லம் அருகே கிணற்றை சுத்தம் செய்ய சென்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர் இதுபற்றி கூறியது:

"கொல்லம் அருகே 100 அடி ஆழ கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதில் இரண்டு பேர் கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினர். நீண்ட நேரம் ஆகியும் கிணற்றில் இறங்கியவர்களிடமிருந்து எந்த சத்தமும் வராததால், 3-வது நபர் கிணற்றில் இறங்க முடிவு செய்தார். அவரைத் தொடர்ந்து, 4-வது நபரும் கிணற்றில் இறங்கியுள்ளார். கிணற்றில் இறங்கிய நால்வரிடமிருந்தும் எவ்வித சத்தமும் வராததால் கிராமத்தினர் அச்சத்தில் தீயணைப்புத் துறையினரைத் தொடர்புகொண்டனர்."

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், 4 பேரும் உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவருக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்கள்:

சோமராஜன் (53)   
ராஜன் (36)
மனோஜ் (32)
சிவபிரசாத் (24)

Tags : poisonous
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT