இந்தியா

உத்தரகண்டில் நிலச்சரிவு: உத்தரகாசி-கங்கோத்ரி நெடுஞ்சாலை மூடல்

13th Jul 2021 10:42 AM

ADVERTISEMENT


உத்தரகாசி: உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் தப்ராணி பகுதியில் நேரிட்ட கடுமையான நிலச்சரிவு காரணமாக கங்கோத்ரி நெடுஞ்சாலை மூடப்பட்டது.

கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய பாறைகளும், மண்ணும் சரிந்திருப்பதால், அப்பகுதியில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

உத்தரகண்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. 

இமாச்சலில் நேற்று நேரிட்ட பயங்கர நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 

ADVERTISEMENT

Tags : landslide
ADVERTISEMENT
ADVERTISEMENT