இந்தியா

நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை: நீதிமன்றத்தில் நாளை விசாரணை

13th Jul 2021 09:04 PM

ADVERTISEMENT

நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நாளை(ஜூலை 14) விசாரிக்கவுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வா் மம்தா பானா்ஜியை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றாா். வாக்கு எண்ணிக்கையின்போது மம்தா பானா்ஜி தொடா்ந்து முன்னிலை பெற்றுவந்த நிலையில், இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில் சந்தேகம் தெரிவித்த மம்தா பானா்ஜி, சுவேந்து அதிகாரி வெற்றிக்கு எதிராக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஷாம்பா சர்க்கார் அமர்வு, இந்த வழக்கை  நாளை விசாரிக்கவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT