இந்தியா

மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது கவலை அளிக்கிறது: பிரதமர் மோடி

13th Jul 2021 03:19 PM

ADVERTISEMENT

சுற்றுலாத் தலங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா மூன்றாம்  அலையை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுலாத் தலங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கரோனா பெருந்தொற்றால் சுற்றுலா, வர்த்தகம், வணிகம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், தற்போது, சுற்றுலாத் தலங்கள், சந்தைகளில் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது சரி அல்ல. அதை, நான் உறுதியாக கூறுகிறேன்" என்றார்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள்  அறிவிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT