இந்தியா

இன்று தொடங்கும் புரி ரத யாத்திரை: 2 நாள்கள் ஊரடங்கு

12th Jul 2021 11:12 AM

ADVERTISEMENT

 

புரி: ஒடிசா மாநிலம் புரியில் இன்று தொடங்கி 9 நாள்கள் நடைபெறும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையை முன்னிட்டு, நகரம் முழுவதும் இன்று முதல் 2 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்திப் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை திருவிழா இன்று தொடங்கவிருக்கும் நிலையில், 65 பட்டாலியன் காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த ஞாயிறு இரவு 8 மணி முதல் ஜூலை 13ஆம் தேதி இரவு 8 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒடிசா மாநிலத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின்றி நடைபெறும் என்று ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

கரோனா பேரிடர் காலம் என்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின்போது, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிமணி கட்டுரையைப் படிக்க.. மக்களின் காவலன் புரி ஜகந்நாதர்!

அதுபோலவே, புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் பங்கேற்று ரதத்தை இழுக்கும் கோயில் ஊழியர்களுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ஜூலை 12ஆம் தேதி பக்தர்களின்றி நடைபெறும். உச்ச நீதிமன்ற மற்றும் ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரை நடைபெறும். ரத யாத்திரையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரத யாத்திரையில் பங்கேற்கும் கோயில் ஊழியர்களும், கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்திக் கொண்டவர்களாகவும், கரோனா இல்லை என்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

 காவல்துறையினர் அல்லாமல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் மற்றும் கோயில் ஊழியர்கள் ரத யாத்திரையில் அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு புரி கோயிலைச் சுற்றி நான்கு இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஜூலை 8ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT