இந்தியா

குஜராத்தை விட ஜம்மு-காஷ்மீர் மோசமடையவில்லை: மெஹபூபா

12th Jul 2021 04:00 PM

ADVERTISEMENT

தொழில்துறை முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பில் குஜராத்தை விட ஜம்மு-காஷ்மீர் மோசமடைந்துவிடவில்லை என்று  மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி விமர்சித்தார். 

மேலும், செனாப் பள்ளத்தாக்கு மின் திட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வெளிமாநிலங்களுக்கும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு சட்டங்கள் மற்றும் குடியேற்ற சட்டங்கள் வெளிநாட்டினரால் வழங்கப்படவில்லை. அவற்றை இந்த நாடு தான் வழங்கியது.  ஜம்மு-காஷ்மீர் மக்கள் நாட்டுடன் இணைந்து இருப்பதற்கே விரும்புகின்றனர். 

ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறை திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மின் திட்டங்களில் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்குள்ள மின்சாரமும், நீரும் வெளி மாநில மக்களுக்கும் வழங்கப்படுகிறது. 

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பொருளாதார சீற்றமும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்படவில்லை. ஜம்மு-காஷ்மீர் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ளதாக ஆளும் மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. 

முந்தைய ஆட்சியிலிருந்து பொருளாதார தாக்கம் ஏற்பட்டிருந்தால், ஜம்மு-காஷ்மீர் தற்போது குஜராத்தை விட மோசமான நிலையை அடைந்திருக்கும் என்று கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT