இந்தியா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மூத்த நடிகர் நசிருதீன் ஷா

7th Jul 2021 06:26 PM

ADVERTISEMENT

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த நடிகர்  நசிருதீன் ஷா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள  நசிருதீன் ஷா கடந்த ஜூன் மாத  இறுதியில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் 

தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை அவர் வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பிய தகவலை அவரது மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

1967 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்  நசிருதீன் ஷா. 1980களில் புகழ்பெற்ற நடிகராக விளங்கினார். தொலைக்காட்சி, இணையத்தொடர்களிலும் நடித்துள்ளார். நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1987-ல் பத்மஸ்ரீ 2003-ல் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT