இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

7th Jul 2021 11:28 AM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய, மெஹ்ரஸுத்தின் ஹால்வாய் என்ற ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் பழைய மற்றும் முக்கிய தளபதி ஹண்ட்வாரா துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் மிகப் பெரிய வெற்றி இது என்று காஷ்மீர் மண்டல காவல்துறை ஆய்வாளர் விஜய் குமார் சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT