மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் 12 மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
முன்னதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், குழந்தைகள்- பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சௌத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, சமூகநலத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பபூல் சுப்ரியோ, தோட்ரே சஞ்சய் சாமரோ, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட 12 அமைச்சர்களின் ராஜிநாமா கடிதத்திற்கும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா தில்லியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்: 43 பேர் பட்டியல் வெளியீடு