காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிரிபாஷங்கர் சிங் பாஜகவில் இணைந்தார்.
மும்பையில் உள்ள மாநில கட்சித் தலைமையகத்தில் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கட்சி மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் கிரிபா ஷங்கர் சிங் பாஜகவில் இணைந்தார்.
மகாராஷ்டிர பாஜக தலைவர் மாதவ் பண்டாரி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கிரிபாஷங்கர் சிங் ஒரு பெரிய தலைவர். மும்பை அரசியலுக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார். கடந்த சில மாதங்களாக அவர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து கட்சித் தலைமை விரைவில் முடிவு செய்யும் என்றார்.
கிரிபாஷங்கர் சிங் கடந்த 2004 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.