கரோனா பெருந்தொற்றை கையாண்டதில் மோடி அரசின் தோல்வியே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனின் ராஜிநாமா என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்பட 12 அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ராஜிநாமா
ஹர்ஷ வர்தன் ராஜிநாமா குறித்து ப. சிதம்பரம் தெரிவித்துள்ளது:
“கரோனா பெருந்தொற்றைக் கையாளுவதில் மோடி அரசு முற்றிலுமாக தோல்வியடைந்ததன் ஒப்புதலே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ராஜிநாமா செய்திருப்பது.
இது மற்ற அமைச்சர்களுக்குமான ஒரு பாடம். ஒரு செயல் சரியாக நடந்தால், அதன் பாராட்டுகள் பிரதமரைச் சாரும். அதுவே தவறாக நடந்தால் அமைச்சர்தான் பலிகடா.”