இந்தியா

மீண்டும் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 43 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

7th Jul 2021 09:56 AM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 43 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக  930 பேர் உயிரிழந்தனர்.

நேற்று முன் தினம் 39 ஆயிரமாகவும், நேற்று 34 ஆயிரமாகவும் இருந்த கரோனா பாதிப்பு இன்று 43 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, புதிதாக 43,733  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  3,06,63,665-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4,59,920 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

 கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 930 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,04,211-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 47,240 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,97,99,534-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் 19,07,216 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கரோனா பரிசோதனை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 42.33 லட்சமாக அதிகரித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT