இந்தியா

ஆந்திரத்தில் ஆக.16 முதல் பள்ளிகள் திறப்பு

7th Jul 2021 05:41 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் 16 முதல் பள்ளிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக 2021-22 ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன. தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் கூறியதாவது,

ஆந்திரத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வகுப்புகள் ஜூலை 12 முதல் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT