இந்தியா

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு

7th Jul 2021 10:52 AM

ADVERTISEMENT


குவகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியிருந்தது. 

அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக அண்டை மாநிலங்களான மேகாலயம், மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதிகள் மற்றும் வங்கதேசத்தின் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 8.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாம் மாநிலத்தின் கோல்பாரா பகுதியில் அமைந்திருந்ததாகவும், இந்த நிலநடுக்கம் 14 கிலோ மீட்டர் ஆழம் வரை உணரப்பட்டதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி திறந்தவெளிப் பகுதியில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT