இந்தியா

மத்திய அமைச்சரவையில் புதிதாக 43 பேர் பதவியேற்பு

7th Jul 2021 07:28 PM

ADVERTISEMENT

மத்திய அமைச்சகம் விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்பட 43 புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால், கிஷண் ரெட்டி, அனுராக் சிங் தாக்குர், ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.  

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் 14 பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள். மேலும், புதிய அமைச்சரவையில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இங்கே கிளிக் செய்யவும்: புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களின் பட்டியல்...

மத்திய அமைச்சர்களாக இருந்த ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர்,  ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்குவார், தபாஸ்ரீ சௌத்ரி, சதானந்த கவுடா, தாவர்சந்த் கெலாட், ஹர்ஷவர்தன், பபூல் சுப்ரியோ, தோட்ரே சஞ்சய் சாமரோ, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் இன்று ராஜிநாமா செய்ததை தொடர்ந்து மீதமுள்ள மத்திய அமைச்சர்கள் தங்களின் பதவிகளில் தொடர்கிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்துள்ளது.  ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT