இந்தியா

திருவனந்தபுர விலங்கியல் பூங்காவில் ராஜநாகம் கடித்து பணியாளர் பலி

1st Jul 2021 05:59 PM

ADVERTISEMENT


திருவனந்தபுர விலங்கியல் பூங்காவில் ராஜநாகம் கடித்து பணியாளர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

பூங்காவில் விலங்குகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பில் ஹர்ஷத் இருந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சியில் இடத்தை சுத்தம் செய்து, விலங்குக்கு உணவு வைக்க பகல் 12.15 மணிக்கு அவர் பாம்பு கூண்டுக்குள் நுழைகிறார். அதன்பிறகு, நீண்ட நேரமாக அவரைக் காணவில்லை என்றவுடன் சக பணியாளர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது அவர் அந்தக் கூண்டுக்குள் இருப்பதைப் பார்த்திருக்கின்றனர்.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : King cobra
ADVERTISEMENT
ADVERTISEMENT