இந்தியா

நாட்டில் 33.96 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக முழு விவரம்

1st Jul 2021 08:57 PM

ADVERTISEMENT


நாட்டில் மொத்தம் 33.96 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி:

இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணி வரை 33,96,28,356 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரவு 7 மணி வரையிலான தகவலின்படி இன்று (வியாழக்கிழமை) மட்டும் 38,17,661 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

18-44 வயதினரில் இன்று 21,80,915 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 84,107 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.  

ADVERTISEMENT

தமிழகம் உள்பட மொத்தம் 8 மாநிலங்களில் 18-44 வயதினர் பிரிவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


வயதுவாரியாக விவரம்


சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,02,16,149

இரண்டாவது தவணை  - 72,69,153

 

 

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,75,28,893

இரண்டாவது தவணை - 95,48,256

 

 

18-44 வயதினர்:

முதல் தவணை - 9,38,32,139

இரண்டாவது தவணை - 22,68,517

 

 

45-59 வயதினர்:

முதல் தவணை - 8,91,67,857

இரண்டாவது தவணை - 1,68,22,005 

 

 

60 வயதுக்கு மேற்பட்டோர்

முதல் தவணை - 6,83,27,397

இரண்டாவது தவணை - 2,46,47,990

 

 

மொத்தம்

முதல் தவணை - 27,90,72,435

இரண்டாவது தவணை - 6,05,55,921

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT