இந்தியா

பட்டயக் கணக்காளர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

1st Jul 2021 12:29 PM

ADVERTISEMENT

பட்டயக் கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் 1949, ஜூலை 1 அன்று உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி பட்டயக் கணக்காளர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'பட்டயக் கணக்காளர்கள் நாளில் (Chartered Accountants Day) அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவின் முன்னேற்றத்தில் பட்டயக் கணக்காளர்கள் சமூகத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.

அனைத்து பட்டயக் கணக்காளர்களும் அவர்களது பணியில் சிறப்பான கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இதனால் இந்திய நிறுவனங்கள் உலகளவில் சிறந்த ஒன்றாக உருவாகும்' எனப் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT