இந்தியா

உயிரோடு இருக்க அல்ல.. உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடியவரின் கதை

1st Jul 2021 02:15 PM

ADVERTISEMENT


அஸம்கார்: லால் பிஹாரி மிருதக்.. இவர் தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க நடத்திய சட்டப் போராட்டம் அப்போது நாளிதழ்களில் முக்கியச் செய்தியானது. அவர் பற்றிய தகவல் மீண்டும் செய்தியாகியுள்ளது.

அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இறந்தவர் என்று கூறப்பட்ட லால் பிஹாரி ம்ரிதக், பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பின் கடந்த 1994-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி உயிரோடு இருப்பதை நிரூபித்தார். அவருக்கு தற்போது 66 வயதாகிறது.

சரியாக 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் உயிரோடு இருப்பதை நிரூபித்த லால் பிஹாரி, மீண்டும் பிறந்ததாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆவதால், தற்போது தனது 56 வயது மனைவி கர்மி தேவியை மீண்டும் கரம்பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்: ஐவர்மேக்டின் என்றோர் அருமருந்து: மறைக்கிறதா மருத்துவத் துறை?

ADVERTISEMENT

அரசின் பதிவுகள்படி, நான் மீண்டும் பிறந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. எனது திருமண வைபவம் 2022ஆம் ஆண்டு, அதாவது அரசுப் பதிவின்படி எனக்கு 28 வயது ஆகும் போது நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.

லால் பிஹாரிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.  மக்களுக்கு எனது கதையை நினைவூட்டவே, மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறுகிறார்.

நான் போராடி எனது வழக்கில் வென்றபோதும், இந்த பதிவுகள் முறையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லைடி. கடந்த 18 ஆண்டுகளாக நான் இறந்தவனாகவே, அரசின் பதிவுகளில் இருந்திருக்கிறேன். இன்னும் என்னைப் போல எத்தனையோ பேர் இறந்தவர்களாகவே இருக்கிறார்கள், அவர்களது நிலங்களை அரசு அதிகாரிகளின் உதவியோடு, உறவினர்கள் பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்று பாதிக்கப்பட்ட நபர்களுக்காக நான் உதவி செய்து வருகிறேன், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன் என்கிறார்.

அஸம்கார் மாவட்டத்தில் வசித்து வரும் லால் பிஹாரி கடந்த 1975ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதனை எதிர்த்து அவர் நடத்திய சட்டப்போராட்டத்தின்போது அவர் தனது பெயருடன் இறந்தவர் என்பதைக் குறிக்கும் ம்ரிதக் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார்.

இவரைப் பற்றி காகிதம் என்ற பெயரில் திரைப்படமும் வெளியாகியுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT