இந்தியா

கொல்கத்தாவில் பேருந்து விபத்து: ஒரு காவலர் பலி, பலர் படுகாயம்

1st Jul 2021 03:52 PM

ADVERTISEMENT

கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த பேருந்து விபத்தில் காவலர் ஒருவர் பலியாகினர், மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.

கொல்கத்தாவின் ஹெளராவிலிருந்து மெட்டியாப்ரூஸ் நோக்கி வில்லியம் கோட்டை அருகே பிற்பகல் 12.30 மணியளவில் பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது.  

அப்போது நிலைத் தடுமாறிய பேருந்து அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற கொல்கத்தா காவல் ரிசர்வ் படையை சேர்ந்த விவேகானந்தா தாப் மீது மோதி, வில்லியம் கோட்டை சுவற்றில் இடித்து நின்றது.

இந்த விபத்தில், பேருந்துக்கு அடியில் சிக்கிய காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ADVERTISEMENT

மேலும், பேருந்து சுவற்றில் மோதியதில் காயமடைந்த 13 பயணிகளை மீட்டு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதில், 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று கொல்கத்தா காவல் ஆணையர் செளமென் மித்ரா விசாரணை நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT