இந்தியா

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் - 1,197, பாஜக - 1,140 இடங்களில் வெற்றி

31st Jan 2021 10:05 PM

ADVERTISEMENT


ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 1,197 இடங்கலிலும், பாஜக 1,140 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜஸ்தானில் 20 மாவட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற 3,034 இடங்களுக்கான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர். இதில் காங்கிரஸ் 1,197 இடங்களிலும், பாஜக 1,140 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதுதவிர தேசியவாத காங்கிரஸ் கட்சி 46 இடங்களிலும், சுயேச்சைகள் 634 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், ஆர்எல்பி 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

இதைத் தொடர்ந்து காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் தாங்கள் வெற்றி பெற்றதாகவே வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : rajasthan
ADVERTISEMENT
ADVERTISEMENT