இந்தியா

தில்லியில் இன்று புதிதாக 140 பேருக்கு கரோனா தொற்று

31st Jan 2021 10:02 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் இன்று 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 140 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  
இதன் மூலம், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,35,096-ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 60,695 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 38,746 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 21,949 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கரோனா தொற்றால் இன்று 4 போ் உயிரிழந்தனா். 
இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,853-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 211 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,22,882-ஆக உயா்ந்துள்ளது. 
தற்போது 1,361 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 548 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 7,235 படுக்கைகள் காலியாக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT