இந்தியா

காங்கிரஸ் தலைவராக ராகுல்: தில்லி காங்கிரஸ் தீர்மானம்

31st Jan 2021 08:40 PM

ADVERTISEMENT


காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் கோரி தில்லி காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு முறைத் தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தியையே கட்சியின் தலைவராக நியமிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி தில்லி காங்கிரஸ் தலைவர் சௌதரி அனில் குமார் தெரிவிக்கையில், 'நாட்டில் நிலவும் அபாயகரமான அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல் காந்தி போன்ற வலிமையான தலைவர் தேவை' என்றார்.

தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

"மோடி அரசின் தவறுகளை அம்பலப்படுத்துவதில் ராகுல் காந்தி தீர்க்கமான போரை நடத்தி வருகிறார். காங்கிரஸ் நிர்வாகிகளின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் ஊக்குவிக்க காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி கட்சியை வழிநடத்துவது உடனடி தேவையாக உள்ளது."

விவசாயிகளின் பேரணியை கையாளத் தெரியாமல் அது வன்முறையில் முடிந்ததால் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலகக் கோரியும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags : rahul gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT