இந்தியா

கோட்சேவிற்கு கோயில்: எதிர்ப்பு தெரிவித்து காந்தி சிலை முன்பு காங். போராட்டம்

30th Jan 2021 04:16 PM

ADVERTISEMENT

கோட்சேவிற்கு கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு இந்து மகாசபை சார்பில் சிலை வைத்து கோயில் கட்டப்பட்டுள்ளது..

இந்நிலையில் காந்தி நினைவு நாளான இன்று (ஜன.30) காங்கிரஸ் கட்சியினர் போபாலிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் காந்தியைக் கொன்ற கோட்சேவிற்கு கோயில் எழுப்பிய இந்து மகா சபையின் நடவடிக்கையை கண்டித்து காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

காந்தி சிலை முன்பு திரண்ட காங்கிரஸார் ராட்டையுடன், கைகளில் பதாகைகளை ஏந்தி அமைதியான வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT