இந்தியா

உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை-மகன் மீது வழக்கு

30th Jan 2021 01:11 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கடைக்காரர் மற்றும் அவரது மகன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அத்தியாவசியப் பொருள்களை வாங்குதற்காக தொகட்டி கிராமத்திலிருந்த கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த கடை உரிமையாளர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சிறுமியை அவ்வபோது மிரட்டி வந்துள்ளார்.

இதனிடையே கடந்த வாரம் கடைக்குச் சென்றபோது கடை உரிமையாளரின் மகன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து வெளியில் கூறினால் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனிடையே சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவமனைக்கு சென்றபோது சிறுமி கர்ப்பமாயிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கடை உரிமையாளர் மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT