தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் அவரது படத்திற்கும், சிலைக்கும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தில்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.