நாட்டில் இதுவரை 37 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாடு தழுவிய மாபெரும் கொவைட்-19 தடுப்பூசி திட்டத்தின் 15-ஆம் நாளான இன்று, தடுப்பூசி போடப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இது வரை 37 லட்சத்தை தாண்டியுள்ளது.
68,830 முகாம்களில் 37,06,157 சுகாதார பணியாளர்களுக்கு இன்று மாலை 7 மணி வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மட்டும் மாலை 7 மணி வரை 5,143 முகாம்கள் நடைபெற்றன.
15-ஆம் நாளான இன்று நாடு முழுவதும் 2,06,130 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 1,01,840 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இறுதி தகவல்கள் இன்று பின்னிரவு கிடைக்கும். தமிழ்நாட்டில் இதுவரை 1,01,840 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பத்து லட்சம், இருபது லட்சம் மற்றும் முப்பது லட்சம் பேருக்கு தடுப்புமருந்தை குறுகிய காலத்தில் வழங்கிய நாடு இந்தியா ஆகும்.
உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கைகளில் ஒன்றான இந்தியாவின் கொவைட் தடுப்பூசி விநியோக திட்டம், 2021 ஜனவரி 16 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.