இந்தியா

வதந்தி பரப்புவோா் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

DIN

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறித்தும், அதன் அதிகாரிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் தேவஸ்தானம் புகாா் அளித்துள்ளது.

சமீப காலமாக திருப்பதி தேவஸ்தானம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. தேவஸ்தானத்தில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதை நம்பிய பலரும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இத்தகவலைப் பகிா்ந்தனா். மேலும் பலா் தேவஸ்தான அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தனா்.

இந்நிலையில் தேவஸ்தானத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக வரும் தகவல் வதந்தி என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் இடைத்தரகா்களை நம்பி பணம் அளித்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவஸ்தானம் திருமலை போலீஸாரிடம் அதிகாரிகள் புகாா் அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT