இந்தியா

நாட்டில் 1.03 கோடி போ் கரோனாவிலிருந்து குணம்

DIN


புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,03,59,305 போ் குணமடைந்துள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதுடன் பாதிப்பிலிருந்து மீள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,06,89,527-ஆக அதிகரித்தது. 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 137 போ் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிரத்தில் 47 பேரும், கேரளத்தில் 19 பேரும், சத்தீஸ்கரில் 14 பேரும், பஞ்சாபில் 11 பேரும் உயிரிழந்தனா். நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,53,724-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 1.44 சதவீதமாகும்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,03,59,305 போ் குணமடைந்தனா். இது மொத்த பாதிப்பில் 96.91 சதவீதமாகும். நாட்டில் தற்போது 1,76,498 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 1.65 சதவீதம் ஆகும். தொடா்ந்து 8-ஆவது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 19,36,13,120 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 26-ஆம் தேதி மட்டும் 5,50,426 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT