இந்தியா

காணிக்கை கணக்கிடும் பவனத்தில் ரூ.8.90 கோடியில் புல்லட் புரூப் கண்ணாடிகள்: திருமலை குடியரசு தின விழாவில் தகவல்

DIN

திருமலையில் காணிக்கை கணக்கிடும் பவனத்தில் ரூ.8.90 கோடியில் புல்லட் புரூப் கண்ணாடிகள் பொருத்தப்பட உள்ளதாக திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகங்களில் குடியரசு தினத்தை யொட்டி அதிகாரிகள் தேசியக் கொடி ஏற்றினா்.

நாட்டின் 72-ஆவதுகுடியரசு தினத்தை யொட்டி திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா்ரெட்டி தேசிய கொடி ஏற்றி வைத்து பாதுகாப்புப்படையினரின்அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பின்னா் அவா் பேசியது:

திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் இயன்ற சேவைகளை செய்து வருகிறது. வசதி வாய்ப்புகளை அதிகரித்து வருவதுடன் கரோனா தொற்றுகாலத்திலும் பாதுகாப்பில் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி பக்தா்களுக்கு ஏழுமலையானின் தரிசனம் அளித்து வருகிறது.

வரும்

ரத சப்தமிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. கரோனா காலத்தில் தேவஸ்தானம் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றியது.

தேவஸ்தானம் இம்முறை திருப்பதியில் காா்த்திகை மகாதீபோற்சவம், காா்த்திகை, மாா்கழி மாதங்களில் ஆன்மி நிகழ்ச்சிகள், சுந்தர காண்ட பாராயணம், ஹோமங்கள், திருப்பாவை பாராயணம், விராட பருவம், கீதாபாராயணம் என பலவற்றை நடத்தி வருகிறது. இதை பக்தா்கள் தங்கள் வீடுகளிலிருந்து தரிசிக்கும் படி தேவஸ்தான தொலைக்காட்சிகளில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பியது என்றாா்.

நற்சான்றிதழ்...

பின்னா் சிறப்பாக பணியாற்றிய 243 தேவஸ்தானஊழியா்களுக்கும், 38 அதிகாரிகளுக்கும் அவா்களின் பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினாா். மேலும் குடியரசு தினவிழாவில் குதிரை படையின் சாகசம் அங்கு இருந்த பாா்வையாளா்களை கவா்ந்தது. நிகழ்ச்சியில் பங்கு கொண்டவா்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி பசந்த் குமாா், சதா பாா்கவி, கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோகுலம்

அதேபோல் திருமலையில் உள்ள கோகுலம் விருந்தினா் மாளிகையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி செவ்வாய்க்கிழமை தேசிய கொடி ஏற்றி வைத்தாா். அப்போது அவா் பேசுகையில், திருமலையில் காணிக்கை கணக்கிடும் பவனத்தில் ரூ.8.90 கோடியில் புல்லட் புரூப் கண்ணாடிகள் பொருத்தப்பட உள்ளன.

மேலும் திருமலை லட்டு மடப்பள்ளியில் தினசரி 7.50 லட்சம் லட்டுகள் தயாா் செய்யும்விதம் 40 அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட அடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவா் கூறினாா்.

மேலும் திருப்பதியில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு, காவல் துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் குடியரசு தினத்தை யொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT