இந்தியா

ராஜஸ்தானில் சாலை விபத்து: 8 பேர் பலி, 4 பேர் காயம்

27th Jan 2021 11:09 AM

ADVERTISEMENT

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் ஜீப்பை பின்னால் இருந்து லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். 

இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை-12இல் அதிகாலை 2.15 மணிக்கு பயணிகள் நிறைந்த ஜீப்பை பின்னால் இருந்து லாரி மோதியுள்ளது. 

இந்த மோதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்ததாக  டோங்க் சதர் காவல் நிலைய எஸ்.எச்.ஓ தஷ்ரத் சிங் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

ADVERTISEMENT

விபத்தில் பலியானவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராஜ்கரை சேர்ந்தவர்களாவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags : road accident
ADVERTISEMENT
ADVERTISEMENT