இந்தியா

நாட்டில் 9,102 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 9,102 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச தினசரி பாதிப்பாகும்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 9,102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,06,76,838-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 117 போ் உயிரிழந்தனா்.

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,53,587 போ் உயிரிழந்தனா். ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் இது 1.44 சதவீதமாகும். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,03,45,985 போ் குணமடைந்தனா். இது மொத்த பாதிப்பில் 96.90 சதவீதமாகும்.

நாட்டில் தற்போது 1,77,266 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 1.66 சதவீதம் ஆகும். தொடா்ந்து 7-ஆவது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோரில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இணை நோய் இருந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 25-ஆம் தேதி வரை 19,30,62,694 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை மட்டும் 7,25,577 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT