இந்தியா

தில்லி வன்முறை: காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

27th Jan 2021 01:56 PM

ADVERTISEMENT

தில்லியில் டிராக்டர் பேரணியின்போது நடந்த வன்முறை தொடர்பாக தில்லி காவல்துறை ஆணையர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.  

தில்லியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தலைநகர் தில்லி போர்க்களமாக மாறியது. போலீஸாரின் தடுப்புகளை உடைத்தெறிந்து பேரணியாகச் செல்ல விவசாயிகள் முயற்சி செய்ததால், தடியடி-கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு என்ற அளவுக்கு நிலைமை மோசமானது. 

பேருந்துகள், போலீஸாரின் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் காவல்துறையினர் 300 பேர் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியானார். 

தில்லியில் நடந்த வன்முறைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் இல்லை என்றும் வன்முறைக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

ADVERTISEMENT

இந்நிலையில் தில்லி வன்முறை குறித்து தில்லி காவல்துறை ஆணையர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தில்லியில் சட்டம்- ஒழுங்கு நிலைமையை பராமரிக்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. 

தில்லியில் நடந்த வன்முறை குறித்து விவசாய சங்கங்களும் இன்று விவாதிக்க உள்ளன. 

 

 

Tags : delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT