இந்தியா

விவசாயத் தலைவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்: தில்லி காவல் ஆணையர்

DIN


டிராக்டர் பேரணியின்போது விவசாயிகள் நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றவில்லை என தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறை குறித்து தில்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா செய்தியாளர் சந்திப்பில் புதன்கிழமை தெரிவித்தது:

"தில்லி மக்களின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு டிராக்டர் பேரணிக்கு சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பேரணி நண்பகல் 12 முதல் மாலை 5 மணி வரைதான் நடைபெற வேண்டும் என்றும் அந்தக் குழுக்களுடன் விவசாய சங்கத் தலைவர்கள் தலைமை வகிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டது.

5000 டிராக்டர்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆயுதங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டது. 

ஜனவரி 25 இரவில் விவசாயிகள் வாக்குறுதியைக் கடைப்பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது. ஆக்ரோஷமான கடுமையான ஆயுதங்களுடன் மேடைகளில் ஆத்திரமூட்டும் வகையில் பேசினர். அவர்களுடைய நோக்கத்தை அது தெளிவுபடுத்திவிட்டது.

வன்முறையில் (ஜனவரி 26-இல் ஏற்பட்ட டிராக்டர் பேரணியின்போது) 394 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தில்லி காவல் துறையால் 25-க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  குற்றவாளிகளைக் கண்டறிய அடையாளம் கண்டறியும் அமைப்பு முறை, சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துகிறோம். எந்தவொரு குற்றவாளியும் தப்ப முடியாது.

19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒப்பந்தத்தின்படி, பேரணி அமைதியாக முடிய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நிபந்தனைகளைப் பின்பற்றாத காரணத்தினால்தான் வன்முறை வெடித்தது. விவசாயத் தலைவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT