இந்தியா

கேரளம்: அரசுப் பள்ளி கட்டடத்தைத் திறந்து வைத்தார் ராகுல் காந்தி

27th Jan 2021 02:58 PM

ADVERTISEMENT


கேரளத்தில் அரசுப் பள்ளி கட்டடத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி திறந்து வைத்தார்.

கேரளத்திற்கு இரண்டு நாள்கள் பயணமாக சென்றுள்ள ராகுல் காந்தி, தமது தொகுதிக்குள்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்து, கட்சி நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார்.

மேலும் முஸ்லீம் லீக் கட்சித் தலைவரையும் சந்தித்து பேசவுள்ளார். கேரளத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அனைத்துக் கட்சியினரும் பல்வேறு கட்ட பிரசாரப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் கேரளத்தில் ராகுல் காந்தி இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT