இந்தியா

வன்முறை எதிரொலி: தில்லியில் அமைதியை நிலைநாட்ட கூடுதலாக 16 தொகுதி துணை ராணுவப்படை பாதுகாப்பு

 நமது நிருபர்

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறைகள் எதிரொலியாக பொது அமைதியை நிலைநாட்டும் வகையில் தில்லியில் துணை ராணுவப்படையினரைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
 உ.பி. மாநில எல்லைகளான காஜிப்பூர், சிங்கு, திக்ரி போன்ற பகுதிகளில் விவசாயிகள் பேரணிக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் தில்லி இந்தியா கேட், தில்லி செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததால் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
 இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தமது இல்லத்தில் அவசரக்கூட்டத்தை கூட்டினார். மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா, தில்லி காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் அரவிந்த் குமார், மற்றும் பல உள்துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
 விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட வழிகளை விட்டு விட்டு மாற்றுச் சாலைகளில் வருவதற்கு டிராக்டர்களையும், புல்டோசர்களையும் பயன்படுத்தி தடுப்புச்சுவர்களை உடைத்தும் அகற்றியும் தில்லி எல்லைக்குள் வந்தது குறித்து உள்துறை அமைச்சருக்கு போலீஸ் அதிகாரிகள் விளக்கியுள்ளனர். மேலும் குடியரசு தின பாதுகாப்பிற்கு போலீஸ் திருப்பிடப்பட்ட நிலையில் நிலைமை கட்டுக்கடங்காத நிலைமையில் சென்றதோடு விவசாயிகள் டிராக்டர்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய விவகாரங்களை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
 மேலும் தில்லி எல்லைக்குள் வன்முறைகளை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அமைதி திருப்புவதற்கான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சர் கேட்டறிந்துள்ளார். இதில் தில்லி போலீஸாருக்கு உறுதுணையாகவும் கூடுதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இது போன்ற அசம்பாவிதம் மீண்டும் திரும்பாமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்தவும் உள்துறை அமைச்சர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
 இதன்படி தில்லி போலீஸாருக்கு உதவ 16 துணை ராணுவப்படை தொகுதிகளை உடனடியாக தில்லிக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். இதில் 15 மத்திய துணை ராணுவப் படைகள் தில்லியில் பதற்றம் மிகுந்த பகுதிகளில் நிலை நிறுத்தவும் மற்றோரு படையை தயாராக வைத்திருக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT