இந்தியா

அசாம் காங்கிரஸ் எம்எல்ஏ மறைவு

27th Jan 2021 05:10 PM

ADVERTISEMENT

அசாம் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜமால் உதின் அகமது உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

அசாம் மாநிலத்தின் பதர்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜமால் உதின் அகமது. செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஜமால் கரிம்கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 66.

“காங்கிரஸ் தலைவர், அசாம் பதர்பூரின் சட்டமன்ற உறுப்பினர் ஜமால் உதின் அகமது சாஹேப் காலமானதை அறிந்து மிகவும் வருந்துவதாக அகில இந்திய மஹிலா காங்கிரஸின் தலைவரும், சில்சார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷ்மிதா தேவ் தெரிவித்துள்ளார்.

Tags : Assam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT