இந்தியா

நாக்பூர் பாலியல் வன்கொடுமை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு

27th Jan 2021 01:52 PM

ADVERTISEMENT

பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

முறையீட்டை வழக்காக தாக்கல் செய்ய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஆடைக்கு மேலே ஒரு பெண்ணைத் தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

மகாராஷ்டிராவை சேர்ந்தவ 39 வயதுடைய நபர், 2016-ம் ஆண்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கொய்யாப் பழம் கொடுப்பதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியின் மார்பகத்தை ஆடையோடு சேர்ந்து அழுத்தி ஆடையை கழற்ற முயன்றுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாக்பூர் நீதிமன்ற நீதிபதி, ஆடைக்கு மேலே மார்பகங்களை அழுத்துவது பாலியல் அத்துமீறல் என்ற பிரிவின் கீழ் வராது என்றும், உடலுடன் உடல் உரசுவது மட்டும் தான் பாலியல் தாக்குதல் என்ற சட்டத்தின் கீழ் வரும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிர்ச்சி தரக்கூடிய தீர்ப்பை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், முறையீட்டை வழக்காக தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. 

வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த நாக்பூர் கிளை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT