இந்தியா

சுரங்கங்களில் தாது உற்பத்தியைப் பெருக்க ஊக்கத்தொகை: மத்திய அரசு திட்டம்

27th Jan 2021 03:05 AM

ADVERTISEMENT

ஏலம் விடப்பட்ட சுரங்கங்களில் இருந்து உற்பத்தியை முன்கூட்டியே தொடங்கும் வகையில் கனிமத்தொகுதி ஒதுக்கீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், இதன் மூலம் கனிம உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
 இதற்காக சுரங்க விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ள சுரங்க அமைச்சகம், இதுதொடர்பாக சுரங்கத் துறை தொடர்புள்ள அனைத்துத் தரப்பினரிடமிருந்து கருத்துகளையும் பரிந்துரைகளையும் அளிக்குமாறு அரசு கோரியுள்ளது.
 இதுகுறித்து சுரங்க அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
 "2015-ஆம் ஆண்டு கனிம ஏல விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் சுரங்க அமைச்சகம் சார்பில் "கனிம ஏல திருத்த விதிகள்-2021' ஐ தயாரித்துள்ளது. இந்த கனிம ஏல திருத்த விதிகள் குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடமும், சுரங்கத் தொழில் பங்குதாரர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அதனைச் சார்ந்தவர்களும் நிறுவனங்களும் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சுரங்கங்கள், தாதுக்கள், நிலக்கரித் துறைகள் குறித்தும், சுரங்கத் தொழில் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும், தாதுப்பொருள்களின் இறக்குமதியைக் குறைத்து, அதன் மூலம் தாதுப்பொருள்களின் ஏற்றுமதியை விரைவான வளர்ச்சியை அடைவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நீதி ஆயோக் துணைத் தலைவர் தலைமையில் ஓர் உயர்நிலைக்குழு ஒன்றை அரசு ஏற்கெனவே அமைத்திருந்தது.
 அதன்படி உயர்மட்டக்குழுவினர், நிலக்கரித் துறையின் பரிந்துரையின்படி சுரங்க அமைச்சகம் வணிக ஏலத்திற்கான வழிமுறையையும் பின்பற்றலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
 இந்தக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் உள்ள பரிந்துரைகளில் ஒன்று, ஏலமிடப்பட்ட சுரங்கங்களில் இருந்து உற்பத்தியைத் தொடங்கும் வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகும்.
 உயர்நிலைக்குழு பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, கனிம ஏல விதிகள்- 2015 -ஐ முழுமையாக ஆய்வு செய்து, வருவாய் பங்கில் உற்பத்தி செய்யப்படும் கனிமங்களின் அளவுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) ஆவணத்தில் தெரிவித்துள்ள தேதிக்கு முன்கூட்டியே உற்பத்தியை பெருக்குபவர்களுக்கு ஊக்கத்தொகையை அளிக்கவும், இதன் மூலம் நாட்டின் கனிம உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கம் என்றும் கனிம வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT