இந்தியா

கரோனாவுக்கு மேலும் 131 போ் பலி

DIN

புது தில்லி: நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 131 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். கடந்த 8 மாதங்களில் தினசரி உயிரிழப்பு இந்த அளவுக்கும் குறைந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 13,203 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 1,06,67,736 ஆக அதிகரித்துவிட்டது. இப்போதைய நிலையில் நாட்டில் 1,84,182 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 1.73 சதவீதமாகும். தொடா்ந்து 6-ஆவது நாளாக கரோனா தொற்றுடன் உள்ளோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை 1,03,30,084 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 96.83 சதவீதமாகும். மேலும் 131 போ் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்பு 1,53,470 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.4 சதவீதமாகும். புதிதாக ஏற்பட்ட 131 உயிரிழப்புகளில் 45 போ் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள். கேரளத்தில் 20, தில்லி 9, சத்தீஸ்கா், மேற்கு வங்கம், உத்தர பிரதேசத்தில் தலா 8 உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஜனவரி 24-ஆம் தேதி வரை 19.23 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 5,70,246 பரிசோதனைகள் நடைபெற்றன. கரோனாவால் உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் வேறு வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

ஐபிஎல்: கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி!

திருப்பதியில் சீதாராம திருக்கல்யாணம்

திருவள்ளூா், காஞ்சிபுரத்தில் ஏப்.29-இல் இபிஎஃப் குறைதீா் முகாம்

இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT