இந்தியா

குடியரசு நாள் விழா: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

26th Jan 2021 09:50 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டின் 72-வது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, தில்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

புது தில்லிலுள்ள  செங்கோட்டையில் குடியரசு நாள் விழா நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளன. இதனை முன்னிட்டு, தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை அங்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

பின்னர், தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்களை தூவியும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியுடன், ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகளும் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
 

Tags : Prime Minister Modi Republic Day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT