இந்தியா

8 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் குறைந்தபட்ச கரோனா பாதிப்பு

26th Jan 2021 05:10 PM

ADVERTISEMENT


இந்தியாவில் 8 மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) குறைவாகப் பதிவாகியுள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"8 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் குறைவான கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,102 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."

கடந்தாண்டு ஜூன் 4-ம் தேதி 9,304 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல், 8 மாதங்களுக்கு பிறகு 24 மணி நேரத்தில் 120-க்கும் குறைவான பலி எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 117 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நாட்டில் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,77,266 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15,901 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,03,45,985 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 96.90 சதவிகிதம்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT