இந்தியா

சட்டம், ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய மத்திய அரசு: சரத் பவார் விமர்சனம்

26th Jan 2021 06:24 PM

ADVERTISEMENT

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தடுப்புகளை மீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் தில்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளித்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,“பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் கட்டுக்கோப்பான முறையில் போராட்டத்தை நடத்தினர். ஆனால் அரசு அவர்களை கண்டு கொள்ளவில்லை. சட்டம் மற்றும் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அதனைக் காக்க அரசு தவறிவிட்டது” என விமர்சனம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Tractor rally
ADVERTISEMENT
ADVERTISEMENT