இந்தியா

தில்லியில் பல்வேறு மெட்ரோ நிலையங்கள் மூடல்!

26th Jan 2021 01:46 PM

ADVERTISEMENT

விவசாயிகளின் டிராக்டர் பேரணியை அடுத்து தில்லியில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். 

தில்லி - சிங்கு எல்லை, ஹரியாணா- திக்ரி எல்லை, உத்தரப்பிரதேசம் - காசியாபாத், ராஜஸ்தான் - ஷாஜஹான்பூர், பஞ்சாப் - லூதியானா ஆகிய 5 மாநில எல்லைகளில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் நடந்தும், டிராக்டர்களிலும் தில்லி நோக்கி  சென்று கொண்டிருக்கின்றனர். 

ADVERTISEMENT

தில்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது. சுமார் 100 கிமீ தூர பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, தில்லியில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமாய்பூர் பத்லி, ரோஹினி செக்டர் 18/19, ஹைதர்பூர் பத்லி மோர், ஜஹாங்கிர் புரி, ஆதர்ஷ் நகர், ஆசாத்பூர், மாடல் டவுன், ஜிடிபி நகர், விஸ்வவித்யாலயா, விதான் சபா மற்றும் சிவில் லைன்ஸ் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய வாயில்கள் மூடப்படுகின்றன. 

மேலும் அனைத்து கிரீன் லைன் வழித்தடங்களும், லால் குயிலா, இந்திரபிரஸ்தா மற்றும் ஐ.டி.ஓ மெட்ரோ நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

Tags : farmers protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT